Enable Javscript for better performance
மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுவை சோலைநகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிளம்பர் முருகன் (23) . இவரது மனைவி ஜெயலட்சுமி (20). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. முருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை அளவுக்கு அதிகமாக முருகன் மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு ஜெயலட்சுமி எழுந்து பார்த்தபோது அருகில் தன் கணவர் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். கூடத்துக்கு வந்து பார்த்தபோது அங்கு முருகன் தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதுகுறித்து சோலை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai