சுடச்சுட

  

  மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு : மாணவர், பெற்றோர் நலச் சங்க மனுவை ஏற்றது நீதிமன்றம்

  By DIN  |   Published on : 24th October 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில், புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச் சங்க மனுவை உயர் நீதிமன்றம் ஏற்று உத்தரவிட்டது.
  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ கவுன்சில் விதிமுறையை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் தகுதியான மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, பணம் கொடுத்து சேர்ந்த தகுதியற்ற மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என்று புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்திருந்தது.
  இந்த நிலையில், மருத்துவ கவுன்சில் கடந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 778 மாணவர்களை கல்லூரிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
  இதனால் பாதிப்பிற்குள்ளான மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மாணவர்களை வெளியேற்ற அக்டோபர் 23-ஆம் தேதி வரை தடை விதித்து இருந்தது. இந்தத் தடை முடிவுக்கு வர இருந்த நிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  அப்போது, நீதிபதி கிருபாகரன் தடையை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கிடையே, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்கத்தினர் தங்களையும் இதில் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சங்கத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு பிறப்பித்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai