Enable Javscript for better performance
ஆசிரியரை தாக்கிய மாணவர் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியரை தாக்கிய மாணவர் நீக்கப்பட்டார்.
     புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருப்பவர் சுப்பராயன். இவர், பள்ளியில்
     9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படம் எடுத்து வருகிறார். அப்போது, வகுப்பின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் செல்லிடப்பேசியில் படம் பார்த்துள்ளார். அதனை அருகில் இருக்கும் மாணவர்களுக்கும் காண்பித்து உள்ளார்.
     இதைக் கவனித்த ஆசிரியர் சுப்பராயன் அந்த மாணவரை கண்டித்தார். இதில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோபமடைந்த மாணவர், தனது ஆசிரியர் என்று கூட பாராமல் கன்னத்தில் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது.
     இது சம்பந்தமாக ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவர் அந்த மாணவரிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார். ஆனால், பெற்றோரை அழைத்து வரவில்லை. தலைமை ஆசிரியரிடமும் மாணவர் வாக்குவாதம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
     இது சம்பந்தமாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் நேரடியாக வந்து விசாரித்தனர். அப்போதும் பெற்றோர்களை மாணவர் அழைத்து வரவில்லை. இதனால் மாணவரை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
     இதுகுறித்து மாணவருடன் வந்த அவரது அண்ணனிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai