சுடச்சுட

  

  உருளையன்பேட்டை மயானத்தில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு

  By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சத்தில் உருளையன்பேட்டை மயானத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
   நகரின் தென்னஞ்சாலை ரோட்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பொது வகுப்பினர் பயன்படுத்தும் உருளையன்பேட்டை மயானம் பராமரிப்பு இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
   அதனைத் தொடர்ந்து மயானத்தை நேரில் பார்வையிட்ட எம்.எல்.ஏ. சிவா மயானத்தை புனரமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதரவும் வேண்டி எம்.பி. மேம்பாட்டு நிதி ஒதுக்கவும், ஆய்வு செய்யவும் ராதாகிருஷ்ணன் எம்.பி-யிடம் கோரிக்கை வைத்தார்.
   இந்த நிலையில், புதன்கிழமை மாலை எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. சிவா-வுடன் சென்று ஆய்வு செய்தார். மயானத்திற்கு குடிநீர், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, மதில்சுவர், சாலை வசதி, உள்பாதைகள் சீரமைத்தல், மண் அடித்தல், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது. இதற்காக ரூ. 75 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யவும், அதனடிப்படையில் பணிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
   நகராட்சி ஆணையர் கணேசன், நகராட்சி உதவிப் பொறியாளர் மலைவாசன், இளநிலைப் பொறியாளர் குணசேகரன், ஆய்வாளர் சேகர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், தொகுதிச் செயலாளர் சக்திவேல் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai