சுடச்சுட

  

  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: பிரதேச காங். கமிட்டி தீர்மானம்

  By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள் (டஇஇ) ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான
   ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
   முதல்வர் வி.நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லக்ஷ்மிநாராயணன், அரசுக் கொறடா அனந்தராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலன், தனவேலு, தீப்பாய்ந்தான், விஜயவேணி மற்றும் மாநில துணைத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
   புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல் காந்தியை ஏகமனதாக தேர்வு செய்ய புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
   முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, கடந்த 8.11.2016 அன்று சாமான்ய இந்தியர்களை வாட்டி வதைத்த பண மதிப்பிழப்பு (ஈங்ம்ர்ய்ங்ற்ண்க்ஷ்ஹற்ண்ர்ய்) சட்டத்தை மக்களிடத்தில் திணித்து கடந்த ஓராண்டாக இந்திய பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் சீர்குலைத்து மக்களை நடுத் தெருவில் நிறுத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து, கூட்டணிக் கட்சிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து போராட்டம் நடத்த வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai