சுடச்சுட

  

  காசநோயாளிகளுக்கு மாத்திரை வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்

  By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காசநோய் பாதித்தவர்களுக்கு ஒரு மாதத்துக்கான மாத்திரை வழங்கும் திட்டத்தை சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
   புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1400 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   அந்த வகையில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை வாரத்திற்கு மூன்று நாள் என்று வழங்கப்பட்டு வந்த காசநோய் தடுப்பு மாத்திரைகளை தினம்தோறும் உட்கொள்ளும் வகையில் ஒரு மாதத்திற்கான மாத்திரைகளை வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது. காசநோய் தடுப்பு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் ராமன் தலைமை வகித்தார்.
   அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மாத்திரை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
   நாட்டில் முதல் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் காசநோயாளிகள் 6 முதல் 8 மாதத்திற்குள் குணமடைய முடியும்.
   இந்த புதிய முறையின் படி காசநோயாளிகள் தினம்தோறும் இரண்டு முதல் 5 மாத்திரை வரை சாப்பிடலாம்.
   தேசிய சுகாதார இயக்க இயக்குநர் டி.காளிமுத்து வாழ்த்திப் பேசினார். காசநோய் தடுப்புத் திட்ட அதிகாரி டி.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai