Enable Javscript for better performance
கோர்க்காடு ஏரியை பாதுகாக்கக் கோரி நடைப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    கோர்க்காடு ஏரியை பாதுகாக்கக் கோரி நடைப்பயணம்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோர்க்காடு ஏரியை பாதுகாக்கக் கோரி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை நடைப்பயணம் நடைபெற்றது.
     நூறாண்டுகள் பழைமையான கோர்க்காடு ஏரி, கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம் கிராமங்களுக்கு உடையதாகும்.
     மொத்த பரப்பு 83 ஹெக்டேர். இதில் 19 ஹெக்டேர் பரப்பில் சட்டவிரோதமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நீர் நிரம்பினாலும் அதை சமூக விரோதிகள் வெளியேற்றுகின்றனர். 203 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்படுகிறது.
     கீழூர் அணையில் இருந்து வரும் நீரும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததாலும், கதவுகள் இல்லாததாலும் வீணாகிறது. ஏரியை புனரமைக்க நபார்டு வங்கி ரூ.67 லட்சம் ஒதுக்கியும் அரசு இதுவரை எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கோர்க்காடு பகுதி மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
     மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் தொடக்கவுரை ஆற்றினார். நிர்வாகிகள் பாலசுந்தரம், அழகப்பன், மோதிலால், அக்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     கோர்க்காட்டில் தொடங்கிய நடைப்பயணம் உறுவையாறு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், அரும்பார்த்தபுரம், மூலக்குளம், ரெட்டியார்பாளையம், அண்ணா சாலை நேரு வீதி வழியாக சட்டப்பேரவை அருகே நிறைவடைந்தது. பின்னர் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai