சுடச்சுட

  

  சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் நவம்பர் 12-ஆம் தேதி சட்ட நாள் வினாடி-வினா போட்டி நடத்தப்படும் என வழக்குரைஞர் மோகன்தாஸ் தெரிவித்தார்.
   புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சட்டக் கருத்துகள் தொடர்பான அறியாமையை அகற்றும் வகையிலும், அடிப்படை சட்டக்கோட்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. வரும் 12-ஆம் தேதி மாலை 13-ஆம் ஆண்டு சட்ட நகல் மற்றும் சட்ட எழுத்தறிவு நாளை முன்னிட்டு வினாடி வினா நிகழ்ச்சியை நடத்த உள்ளேன். புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கக் கட்டடத்தில் நடைபெறும் இப்போட்டியில் சட்ட மாணவர்கள், சட்டம் பயிலாத இதர மாணவர்கள் மற்றும் இதர பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
   போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். சட்டம் பயிலாத கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர பொதுமக்களில் சரியான வாய் மொழி விடை அளிப்பவர்களுக்கு ரூ.100 வழங்கப்படும். வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் லப்போர்த் வீதி, 103 இல்லத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai