Enable Javscript for better performance
பக்கவாத பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பெற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பக்கவாத பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பெற வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பக்கவாத நோயின் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என ஜிப்மர் நரம்பியல் துறை மூத்த பேராசிரியர் சுனில் நாராயணன் தெரிவித்தார்.
     ஜிப்மர் நலவழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் "பக்கவாதம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்கவாதம் பற்றியும் சிகிச்சை முறைகள், அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், நரம்பியல் துறை மூத்த பேராசிரியர் சுனில் நாராயணன் விளக்கினார். நரம்பியல் உதவிப் பேராசிரியர் ராஜேஸ்வரி அகோரம், பொது மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
     இயன் மருத்துவ நிபுணர் ஜெஸ்மா ஜெயந்தி பக்கவாதத்தில் இயன் மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கினார்.
     இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர். மருத்துவ சமூக சேவகர் ஸ்டாலின் சுந்தராஜ், சத்தியநாதமூர்த்தி ஒருங்கிணைந்து நடத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai