Enable Javscript for better performance
பாசிக் நிறுவனத்துக்கு எதிரான செயல்களை நிறுத்தினாலே லாபம் ஈட்டலாம்: ஏஐடியுசி- Dinamani

சுடச்சுட

    

    பாசிக் நிறுவனத்துக்கு எதிரான செயல்களை நிறுத்தினாலே லாபம் ஈட்டலாம்: ஏஐடியுசி

    By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாசிக் நிறுவனத்துக்கு எதிரான செயல்பாடுகளை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நிறுத்தினாலே லாபம் ஈட்டலாம் என ஏஐடியுசி தொழிற்சங்க மாநிலத் தலைவர் விஎஸ்.அபிஷேகம் தெரிவித்தார்.
     அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     புதுச்சேரி வேளாண் துறையின் பணிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க, அந்தத் துறையின் கீழ் பாசிக் நிறுவனம் 1986-ல் ஆரம்பிக்கப்பட்டது.
     2006-ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கியது. இடு பொருள் வழங்கும் பிரிவின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருள்கள், பூச்சிக்கொல்லி மருந்து, உழவர் கருவிகள் அளித்தல், தண்ணீர் வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.
     மேலும் கட்டடக்கலை பிரிவு, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பிரிவு, குப்பையில் இருந்து உரம், ஆலைக்கழிவில் இருந்து உரம், நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கும் பிரிவு ஆகியவை முக்கிய பணிகளாக நடைபெற்று வருகின்றன.
     இங்கு 350 நிரந்தரப் பணியாளர்களும், 210 தினக்கூலி ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
     இவர்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை முதல் மாதம்தோறும் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போதுவரை மொத்தம் 40 மாத சம்பள நிலுவை உள்ளது.
     இதனால், சம்பளம் வழங்கக் கோரி நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து அரசு, பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் தர முன்வந்தது.
     இதையடுத்து, 57 நாள்கள் தொடர் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பாசிக் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
     அதேபோல, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பிரிவும், மற்றொரு தனியார் நிறுவனத்திற்காக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு இந்தப் போக்கை கைவிட வேண்டும். அதுபோல, தனி நபர் ஒருவருக்காக தேவையில்லாமல் 8000 டன் உரம் வாங்கி இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன் வீரியமும் குறைந்து வருகிறது.
     இதுபோன்ற தேவையற்ற பாசிக்கிற்கு எதிரான செயல்களை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நிறுத்தினாலே பாசிக் நிறுவனம் லாபத்தில் இயங்கும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றார் அபிஷேகம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai