சுடச்சுட

    

    பாஜக தலைவர் தமிழிசை மீது டிஜிபியிடம் புகார்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்பாக அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டிஜிபி சுனில்குமார் கெளதமிடம் அந்தக் கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை மனு அளித்தனர்.
     இதுதொடர்பாக தமிழிசையைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தலைவர் திருமாவளவனை இழிவுபடுத்தியும், அவமானப்படுத்தியும், கொச்சைப்படுத்தியும் பேசிய தமிழிசை மீது தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியினர் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் தலைமையில் புதுவை காவல்துறை இயக்குநர் சுனில்குமார் கௌதமைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
     பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவபொழிலன், திருமாவளவனை கொச்சைப்படுத்தி பேசுவதை தமிழிசை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழிசை மன்னிப்பு கேட்கும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai