Enable Javscript for better performance
புதுச்சேரியில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
     வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 2 நாள்களுக்கு முன்பு இரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேரம் செல்லச், செல்ல பலத்த மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai