Enable Javscript for better performance
புதுவை கடற்கரையில் சுற்றுலா திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சுற்றுலாத் துறை சார்பில் கடற்கரை காந்தி திடலில் சுற்றுலா திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
     மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாவின் பயன்கள் அனைவருக்கும் சென்றடையவும் வகையில், சுற்றுலா திருவிழாவினை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
     அதன் அடிப்படையில், கடந்த 22-ஆம் தேதி ஓவியப் போட்டியும், 23-ஆம் தேதி துமாஸ் வீதி மற்றும் லபோர்தனே வீதி பாரதி பூங்கா வரை தூய்மைப்படுத்தும் பணியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. 24-ஆம் தேதி புதுச்சேரி பாரம்பரியம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் குறித்து கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை காலை பாரதிதாசன் கல்லூரியில் சுற்றுலா குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.
     நிறைவாக காந்தி திடலில் சுற்றுலா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
     முதல்வர் நாராயணசாமி விழாவை தொடக்கி வைத்தார். பின்னர், வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, சுற்றுலாத் துறை செயலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுலாத் துறை இயக்குநர் முனிசாமி நன்றி கூறினார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai