சுடச்சுட

  

  பெண்கள் அடிப்படை, சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கம்

  By  புதுச்சேரி  |   Published on : 26th October 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாண்டிச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
   முதல்வர் தனஞ்செயன் தலைமை வகித்தார். கல்லூரி மகளிர் வாரிய ஆலோசகர் பேராசிரியை கண்மணி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கல்பனா நோக்கவுரை ஆற்றினார். இணை பேராசிரியை ராஜாத்தி வரவேற்றார்.
   புதுச்சேரி மகளிர் ஆணைய இயக்குநரும், சட்ட நிபுணருமான லட்சுமி பங்கேற்று மகளிர் ஆணையத்தின் நோக்கம், பெண்களின் அடிப்படை உரிமைகள், சொத்துரிமை குறித்து விவரித்தார். மேலும், தற்காலத்தில் பெண்களுக்குரிய சட்ட வழிமுறைகள் சவால்கள், உரிமை மீறல் குறித்தும் விவரித்தார். டீன்கள் சுப்பிரமணியம், விவேகானந்தன், துறை பேராசிரியர்கள், பங்கேற்றனர். மகளிர் வாரிய உறுப்பினர் துணை பேராசிரியை கெஜலட்சுமி நன்றி கூறினார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai