சுடச்சுட

  

  போதைப் பொருள், லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கக் கோரி போராட்டம்

  By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போதைப் பொருள்கள், லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் புதன்கிழமை பேரணி, போராட்டம் நடைபெற்றது.
   புதுவையில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி சீட்டு, ஆன்லைன் லாட்டரி விற்பனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், சட்ட விரோத கும்பலால் மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமாக போதை பாக்கு விற்பனை நடைபெறுகிறது.
   இதேபோல, சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் டீ கப். பிளாஸ்டிக் பை ஆகியவற்றை தடுக்க அரசுத் துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
   இவற்றை தடுக்கக் கோரியும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
   அதன் ஒரு பகுதியாக பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம் மற்றும் அலைகள் இயக்கம் சார்பில் கோரிக்கை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
   புதுவை சாரம் வருவாய்த் துறை அலுவலகம் அருகே தொடங்கிய பேரணிக்கு விளையாட்டு அணி அமைப்பாளர் சதீஷ் தலைமை வகித்தார். பெரியார் திவிக ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்திநாத், அலைகள் இயக்க வீரபாரதி சர்வதேச மனித உரிமைகள் சங்க மணிகண்டன், ஆசைதம்பி, உதயகுமார். சுரேஷ், அந்தோணி அந்துவான் உள்பட பலர் கலந்துகொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக சட்டப்பேரவை நோக்கிச் சென்ற பேரணியை ஜென்மராகினி மாதா ஆலயம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai