சுடச்சுட

  

  முறைகேடு புகார் தொடர்பாக புதுவை பல்கலை. துணைவேந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு

  By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முறைகேடாக ஊழியர்களை நியமித்தது தொடர்பாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) அனிஷா பஷீர் கான் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக(பொறுப்பு) அனிஷா பஷீர் கான் இருந்து வருகிறார். இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக பதவி வழங்கியதாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தி துணைவேந்தராக நீட்டிப்பு பெற்றதாகவும், ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் பாலசுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
   இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்துமாறு புதுச்சேரி போலீஸாருக்கு உத்தரவிட்டது.
   இதையடுத்து, காலாப்பட்டு போலீஸார், துணைவேந்தர் (பொறுப்பு) அனிஷா பஷீர் கான் மற்றும், பேராசிரியர் ராமச்சந்திரன், ஊழியர்கள் வீரப்பன் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), ராஜ்குமார் (துணைவேந்தரின் தனிச் செயலர்) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
   இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 468 (மோசடி எண்ணத்தில் செயல்படுதல்) 471(போலி ஆவணங்கள் தயாரித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai