அரசுக் கல்லூரியில் ஜிஎஸ்டி கருத்தரங்கம்
By புதுச்சேரி | Published on : 27th October 2017 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசுக் கலைக் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், ஜிஎஸ்டி - பொருளாதார விளைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வி.பாலாஜி கருத்தரங்கை தொடக்கி வைத்தார். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் சாகுல் அமீது பங்கேற்று, ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், அனைத்து நாடுகளிலும் இதனால் ஏற்பட்ட தன்மைகள், முன்னேற்றம், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு, பயன் முழுவதும் நுகர்வோருக்குச் சென்றடைதல் குறித்து விவரித்தார்.
வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வீரபெரியநாயகி வரவேற்றார். பேராசிரியை மலர்விழி, முனைவர்கள் அருண்மொழி, ஆல்பர்ட் மற்றும் கல்லூரி மாணவர்கள் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சுற்றுலாத் துறை உதவிப் பேராசிரியர்கள் நிஹ்மத்துல்லா, மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவி சுப்ரஜா நன்றி கூறினார்.