சுடச்சுட

  

  ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 3 காலியிடங்களுக்கு அக். 30-இல் கலந்தாய்வு

  By புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாஹே ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உள்ள 3 காலியிடங்களுக்கு சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு, காலாப்பட்டில் உள்ள பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும்.
  ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இன்னும் 3 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, வருகிற 30}ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 
  தகுதியின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும். மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைத் தொடர்புடைய கல்லூரிகளில் இருந்து சுய பொறுப்பிலேயே பெற்று வரவேண்டும்.
  இதுதொடர்பான விவரங்களுக்கு www.centaconline.in என்ற சென்டாக் இணையதளத்தைப் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளவும். இந்தத் தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகெüடு தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai