சுடச்சுட

    

    காலி மனைகளில் தண்ணீர் தேக்கம்: 200 பேருக்கு அபராதம்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலி மனைகளில் நீர் தேங்கி இருந்தது தொடர்பாக புதுச்சேரியில் 200 பேருக்கு நோட்டீஸ் தரப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் தெரிவித்தார்.
     புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சின்னாத்தா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பங்கேற்று டெங்குவைக் கட்டுப்படுத்துவது குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.
     பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
     காலி மனைகள், வீடுகள், கடைகளை சுத்தமின்றி மழைநீர் தேங்கும் அளவுக்கு வைத்திருப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 133 பிரிவின் கீழ் வழக்குப் பதியப்படும் .
     இது வரை 200-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் தரப்பட்டு, குறைந்தபட்ச தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai