சுடச்சுட

  

  காவல் துறையினருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் திட்டம்: டிஜிபி தொடக்கி வைத்தார்

  By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில், புதுவை காவல் துறையினருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் திட்டத்தை டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
   புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் 2,000-க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை உள்பட அனைத்துத் துறைகளும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
   மேலும் பொதுமக்கள், பல்வேறு துறை ஊழியர்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
   இதன் தொடர்ச்சியாக புதுவை காவல் துறையினருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுகாதாரத் துறையுடன் இணைந்து போலீஸாருக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நிலவேம்புக் குடிநீர் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காவல் துறை தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   நிகழ்வில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்தும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்து கொள்வது குறித்தும் போலீஸாருக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
   மேலும், தங்களை டெங்கு காய்ச்சாலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்தப் பணியை டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் தொடக்கி வைத்தார். தொடர்ந்து வரும் நாள்களில் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் போலீஸாருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
   முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன், எஸ்.பி. வீர.பாலகிருஷ்ணன், சித்தா மருத்துவ இயக்குநர் ஸ்ரீதர், ஆயுர்வேத மருத்துவ இயக்குநர் புருஷோத்தமன், காவல் ஆய்வாளர்கள் முருகையன், வரதராஜன், எஸ்.ஐ. ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
   முதல் கட்டமாக உள்ளூர், போக்குவரத்து, ஐஆர்பிஎன், பிஏபி பிரிவுகளைச் சேர்ந்த 200 காவலர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai