சுடச்சுட

  

  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: தொமுச ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் எச்சரிக்கை

  By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தொமுச ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
   புதுச்சேரி மாநில திமுக ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   மாநில தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை வகித்தார். ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் கெளரவத் தலைவர் சக்திவேல், மாநிலத் தலைவர் முரளி, செயலர் மிஷேல், பொருளாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   கூட்டத்தில் தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
   ஆட்டோக்களுக்கு உரிம காலதாமத அபராத தொகை நாள் ஒன்றுக்கு ரூ. 50 என்பதை ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் காலதாமத அபராதத் தொகை ரூ. ஆயிரத்தையும், பர்மிட் காலதாமத அபராதத் தொகையையும் ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி, முதல்வர், துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளிப்பது, மேற்கண்ட கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கட்சியின் மாநிலத் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தொமுச ஆட்டோ தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai