சுடச்சுட

  

  நவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம்

  By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும் புதுவை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு தெரிவித்தார்.
   இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியத் தேர்தல் ஆணையம் 1.1.2018-ஐ தகுதி பெறும் தேதியாகக் கொண்டு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் 2018-ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்கு முறைத் திருத்த பணியைக் கடந்த செப்டம்பர்
   15-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை உரிமைக் கோரிக்கைகளையும், ஆட்சேபணைகளையும் தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அதிக அளவில் வாக்காளர்களைச் சேர்க்கும் பொருட்டும், விடுபட்ட வாக்காளர்கள் விண்ணப்பிக்க ஏதுவாகவும், வாக்காளர் பட்டியலைச் செம்மைப்
   படுத்தும் நோக்கோடும் சிறப்பு இயக்கம் ஒன்றைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
   அதன்படி, வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வரை காலக் கெடுவை நீட்டித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்காளர் பதிவு அதிகாரி/உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
   மேலும், வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் தேர்தல் ஆணையம் பணித்துள்ளது.
   பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேர்தல் துறைக்குப் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai