Enable Javscript for better performance
"பணி அழுத்தம்: மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளது'- Dinamani

சுடச்சுட

    

    பணி அழுத்தம் காரணமாக மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அன்னை தெரசா சுகாதாரப் பட்டமேற்படிப்பு மையத்தின் புல முதன்மையர் முரளி கூறினார்.
     புதுவை அரசு தேசிய மனநலத் திட்டம் சார்பில், உலக மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி கோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு, சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     தேசிய மனநலத் திட்ட அதிகாரி ஜவகர் கென்னடி தலைமை வகித்து, மனநலம் குறித்து பேசினார். பணி இடங்களில் மனநலம் குறித்த அறிவியல் விளக்கங்களை அரசுப் பொது மருத்துவமனையின் மனநலத் துறைத் தலைவர் பாலன் ஸ்டீபன் பொன்மணி கூறினார்.
     புல முதன்மையர் மருத்துவர் முரளி பங்கேற்று, இன்றைய கால கட்டத்தில் பணி அழுத்தம் காரணமாக பலருக்கு மனநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, பணி புரியும் இடத்தில் நல்ல சூழலை ஏற்படுத்துவது அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
     செவிலியர் பள்ளி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் வாழ்த்திப் பேசினார். சமூக ஊழியர்கள் ராஜா, ஐயனார், சுகாதார ஆய்வாளர் நிர்மலா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் அமைப்பினர், திருநங்கைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai