Enable Javscript for better performance
புதுவையில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்தது

    By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 10 ஆக குறைந்துவிட்டதாக குடும்ப நலத் துறைத் துணை இயக்குநர் ஜே.அல்லிராணி தெரிவித்தார்.
     இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதில், புதுவை மாநில சுகாதாரம் - குடும்ப நலத்துறை மற்றொரு மைல் கல்லை எட்டியுள்ளது. ஆயிரம் பேருக்கு ஏற்படும் இறப்பு விகிதம் கடந்த 2010-ஆம் ஆண்டு 22 ஆக இருந்தது. தற்போது இந்தியப் பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட பதிவு அறிவிப்பில் புதுவையில் தற்போது ஆயிரம் குழந்தைகளுக்கு 10 ஆக இறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இது அகில இந்திய அளவில் 37 ஆக உள்ளது.
     புதுவை மாநிலத்தில் உள்ள சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறப்பின் போது அளிக்கப்படும் தரமான சிகிச்சை, மகப்பேறுக்கு முன்னர், பின்னர் அளிக்கப்படும் வசதிகள், கர்ப்பிணிகளுக்குத் தரப்படும் இலவச போக்குவரத்து வசதி, உடல் நலக் குறைவோடு பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க தனி மையங்கள் உள்ளிட்டவற்றால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கோவாவுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே புதுவை மாநிலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்ததில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai