சுடச்சுட

  

  புதுவையில் ரெளடிகளின் நடமாட்டத்தை ஒடுக்க அதிரடி சோதனை

  By  புதுச்சேரி  |   Published on : 27th October 2017 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pondy

  தொடர் கொலைகளை அடுத்து, ரெளடிகளின் நடமாட்டத்தை ஒடுக்க போலீஸார் பல்வேறு பகுதிகளில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

  புதுவையில் உள்ள ரெளடிகளை ஒடுக்கவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

  முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் அந்தந்தக் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் ரெளடிகளை உடனே கைது செய்ய அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.

  அந்த வகையில், ஒதியஞ்சாலை போலீஸார் தாவீதுபேட்டை பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

  தாவீதுபேட்டையின் முக்கிய குற்றவாளிகளான குள்ளசதீஷ், திலிப், குள்ளமகேஷ், சதீஷ் ஆகியோரது வீடுகளில் ஆய்வாளர் ஜெய்சங்கர், காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி உள்ளிட்ட போலீஸார் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.

  தலைமறைவாக உள்ள அவர்களது வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் சோதனையிட்டனர்.

  இந்தச் சோதனையில் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

  இதனிடையே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள் குமரகுருபள்ளத்தைச் சேர்ந்த அச்சுதன் (எ) தொட்டி ஜெயா, டிவி நகரைச் சேர்ந்த ராமசந்திரன் (23) ராசுஉடையார்தோப்பைச் சேர்ந்த ஆனந்த் (எ) பாம்புஆனந்த் (29) திருபுவனையைச் சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகியோரை அந்தந்தக் காவல் நிலைய போலீஸார் ஆயுதங்களுடன் கைது செய்தனர்.

  தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற கைது மற்றும் அதிரடிச் சோதனையால் ரெளடிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai