சுடச்சுட

  

  போலி ஆவணம் மூலம் ரூ.12 லட்சம் மோசடி: வங்கி அதிகாரி மீது வழக்கு

  By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கிக் கடன் தொகையை விவசாயிக்கு வழங்காமல் நூதன முறையில் மோசடி செய்ததாக, வங்கி பெண் அதிகாரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
   கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி கீதா. இவர் புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள தேசிய வங்கியில் விவசாயக் கடன் வழங்கும் பிரிவில், உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
   இவர் 2012-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்கிய போது, தனது உறவினர் ராமுவின் பெயருக்கும் கடன் வழங்கும் படிவத்தை நிறைவு செய்து கடன் பெற்றுக் கொடுத்தாராம். கடன் தொகை ரூ. 12 லட்சத்து 48 ஆயிரம் ராமுவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ராமுவிடமிருந்து வட்டி - அசல் வரவில்லை.
   இதையடுத்து, வங்கி அதிகாரிகள் ராமுவுக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். அதற்கும் எந்தப் பதிலும் வராததால், வங்கி அதிகாரிகள் நேரில் சென்று பணத்தைக் கேட்டனர். அப்போது, தான் கடன் வாங்க விண்ணப்பம் கொடுத்தது உண்மைதான். ஆனால், தனக்கு வங்கிக் கடன் வழங்கப்படவில்லை என்று ராமு தெரிவித்தாராம்.
   வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் கூறியது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, ராமுவின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எப்படி மாயமானது? என விசாரணை நடத்தினர். அப்போது, ராமுவுக்குப் பணம் செலுத்தப்பட்ட இரு நாள்களிலேயே அந்தப் பணம் கீதாவின் வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டது தெரிய வந்தது.
   இதுகுறித்து வங்கி அதிகாரிகள் வங்கியின் பொது மேலாளர் சுப்பிரமணியனிடம் தெரிவித்தனர். அவர், கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் வழக்குப் பதிவு செய்து கீதாவை தேடி வருகிறார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai