சுடச்சுட

  

  டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மணவெளி தொகுதி திமுக சார்பில் புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
   தெற்கு மாநிலத்தில் 12 தொகுதியிலும் உள்ள தி.மு.கழகத்தினர் தொடர்ந்து ரத்த தானம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தினம்தோறும் ஒரு தொகுதி வீதம் ரத்த தானம் வழங்கப்பட்டு வருகிறது.
   அதன் தொடர்ச்சியாக, மணவெளி தொகுதி திமுக சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் லோகு தலைமை வகித்தார்.
   திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., முகாமை தொடக்கி வைத்தார். மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், தொகுதிச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai