வடகிழக்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தயார்
By புதுச்சேரி, | Published on : 27th October 2017 08:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தைச் சந்தித்த பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை முதல் தொடங்கியிருப்பதால், அதனை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பருவ மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மக்கள் நலப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம். பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு இடம் ஒதுக்கீடு தொடர்பாக இரு நாள்களில் ஆய்வு செய்து, அதன் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.