சுடச்சுட

  

  வீடு கட்டும் திட்டம்: முதல் கட்டத் தவணை விடுவிப்பு

  By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியை முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
   இந்தத் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் வீடற்ற பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டத் தவணைத் தொகை ரூ. 70 ஆயிரம் பணி ஆணை வழங்கும்போதும், இரண்டாம் கட்டத் தவணைத் தொகை ரூ. 90 ஆயிரம் ஜன்னல் மட்டம் வந்த பின்னரும், மூன்றாம் கட்டத் தவணைத் தொகை ரூ. 40 ஆயிரம் தளம் கட்டும்போதும் வழங்கப்படும்.
   இந்தத் தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். பயனாளிகள் தங்களது ஆவணங்களை குடிசை மாற்று வாரியத்தில் சமர்ப்பித்து, பணி ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
   இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக புதுச்சேரி அரசு 3,848 பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளது. பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் ரூ. 1.50 லட்சம் மத்திய அரசும், ரூ. 50 ஆயிரம் மாநில அரசும் வழங்கும். இதற்காக மத்திய அரசு ரூ. 57.72 கோடியும், மாநில அரசு ரூ. 19.24 கோடியும் வழங்குகிறது.
   இதையடுத்து, பயனாளிகளுக்கு முதல் கட்டத் தவணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு முதல் கட்ட தொகையை வழங்கினார்.
   பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், துணைத் தலைவர் சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசு செயலர் ஜவஹர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai