சுடச்சுட

  

  அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு: வேலைநிறுத்தம் செய்ய முடிவு

  By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாததைக் கண்டித்து, வேலைநிறுத்தம் செய்ய புதுவை அரசு நிதியுதி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
   இந்த கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம், புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது. தலைவர் வைர.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு ஆலோசகர் கே.பரிமளரங்கன், செயலாளர் மார்ட்டின் கென்னடி, சவரிமுத்துராயன், ஜோசப்பிரிட்டோ, பெஞ்சமின் பிரடெரிக் வெனிஸ்லகன், அகஸ்டின், வின்சென்ட். அந்தோணிசாமி, கோபாலகிருஷ்ணன், இருதயராஜ் நிக்சன், சகாயம் உள்பட பலர் பங்கேற்றனர்.
   மத்திய அரசு கடந்த 13.1.17-இல் வெளியிட்ட அரசாணையில் சம்பள விகிதம் மற்றும் பணிகள் அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் ஒரே மாதிரியாக இருந்தால் எந்த கமிட்டியின் பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தலாம் என அறிவித்துள்ளது.
   இதற்கிடையே புதுவை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 4 மாத ஊதியம் தரப்படாமல் நிலுவையில் உள்ளது.
   இந்த நிலை பல மாதங்களாக உள்ள நிலையில் பல்வேறு வகையில் முதல்வர், அமைச்சர், அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தும், பணியை முடித்து பிற நேரங்களில் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லாததால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
   இதன் ஒரு பகுதியாக வருகிற நவம்பர் 7-ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம், 15-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 30-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai