Enable Javscript for better performance
கட்டணக் குழு பரிந்துரைகளை செயல்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய எம்எல்ஏ வலியுறுத- Dinamani

சுடச்சுட

    

    கட்டணக் குழு பரிந்துரைகளை செயல்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய எம்எல்ஏ வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டணக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
     இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     இதனை வரவேற்கும் அதேநேரத்தில் மக்களை பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு, அந்த செ ய்தியை போக்குவரத்துத் துறை ஆணையர் மூலமாக பகிரங்கப்படுத்தினர். ஆனால் மக்கள் பலனடையக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட விவரத்தை கல்வித் துறை இணையதளத்தில் மட்டும் வெளியிட்டுள்ளது அநீதியாகும்.
     புதுச்சேரி மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் கட்டண நிர்ணயத்தை கல்வி அமைச்சரோ, முதல்வரோ தெரிவித்திருக்க வேண்டும். பத்திரிகைகளின் வாயிலாக விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும்.
     ஆனால், கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட விஷயத்தை மூடி மறைக்கும் விதமாகவும், யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலும் ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
     தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதை இது நிரூபித்துள்ளது. பெயரளவில் கட்டணம் நிர்ணயம் செய்துவிட்டதாக காட்டிக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க அரசு முயற்சிக்கிறதா? இன்னும் சில பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை.
     விடுபட்ட பள்ளிகளின் கட்டணத்தையும் உடனடியாக நிர்ணயிக்க வேண்டும். கட்டணக்குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
     கட்டணக்குழு பரிந்துரைப்படி தற்போது நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட, கடந்த ஆண்டு கூடுதலாக பெற்ற கட்டணத்தை வரும் கல்வியாண்டில் கல்வி நிறுவனங்கள் சமன் செய்ய வேண்டும்.
     கட்டணக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்தாத கல்வி நிறுவனங்களின் உரிமையை அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai