சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அருந்ததியர் சார்பில் சட்டப்பேரவை நோக்கி வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
   புதுச்சேரி மாநில அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு சார்பில் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் வாழும் அனைத்து சக்கிலிய இனத்தவருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்திலும் கல்வி, வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு 3 சதவீதம், வழங்க வேண்டும், அருந்ததியர் என சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும், 4 பிராந்தியங்களிலும் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு வாக்குறுதி அளித்தபடி மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற பேரணிக்கு போராட்டக்குழுத் தலைவர் ஜி.தன்ராஜ், செயலாளர் எம்.தவமணி, பொருளாளர் ஏ.ராஜசேகர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் உரையாற்றினார்.
   சுப்பையா சிலை அருகே புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக பேரவை அருகே செல்ல முயன்ற போது போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் முதல்வர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனுவை அளித்தனர். பேரணியில் 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai