Enable Javscript for better performance
சர்வதேச கராத்தே கிக்பாக்ஸிங் போட்டி: புதுச்சேரியில் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச கராத்தே கிக்பாக்ஸிங் போட்டி: புதுச்சேரியில் தொடக்கம்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் 3 நாள்கள் நடைபெறும் சர்வதேச கராத்தே கிக்பாக்ஸிங்-டே'க்வாண்டோ போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
     உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர்.
     சிறுவர்கள்-சிறுமிகள், ஆண்கள்-பெண்கள் என 60 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
     கிக்பாக்ஸிங் மற்றும் பெரம்பூ அசிடோ போட்டி 7 வயது முதல் 18 வயது வரையும், ஓபன் பிரிவுகளிலும், பாய்ன்ட் சண்டை, லோ வெயிட், பெரம்பூ சண்டை, அலங்கார விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
     தொடர்ந்து 3 நாள்கள் நடக்கும் இந்தப் போட்டியின் நிறைவு விழா வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் அதிகப் புள்ளிகள் பெறுபவர்கள் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai