சுடச்சுட

  

  சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

  By புதுச்சேரி  |   Published on : 28th October 2017 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடுமலைப்பேட்டையில் உள்ள ராணுவ சைனிக் பள்ளியில் சேருவதற்காக புதுச்சேரி மாநில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குநர் குமார் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளியில் 2018-19 கல்வி ஆண்டில், 6 மற்றும் 9ஆம் வகுப்பில் மாணவர்களை (ஆண்கள் மட்டும்) சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு 7.1.2018 அன்று புதுவையில் உள்ள வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். இதற்கான விண்ணப்பம் நவ. 30ஆம் தேதி வரை பெறலாம்.
  6ஆம் வகுப்புக்கு: 1.7.2018 அன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும், அதாவது 2.7.2007-இல் இருந்து 1.7.2008-க்குள் பிறந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 9ஆம் வகுப்புக்கு: 1.7.2018 அன்று 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும், அதாவது 2.7.2004-இல் இருந்து 1.7.2005-க்குள் பிறந்து, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  விண்ணப்பப் படிவமும் விளக்கக் குறிப்பேடும் பெற விரும்பும் பொதுப் பிரிவினர் மற்றும் படைத்துறை பிரிவினர் ரூ.400-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் ரூ.250க்கும் அமராவதி நகர், பாரத ஸ்டேட் வங்கியில் (கிளை - 2191) மாற்றத்தக்க வகையில் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர் என்ற பெயரில் வரைவோலையை (டிடி) எடுத்து, வேண்டுதல் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். மேலும், எந்த வகுப்புக்கு (6, 9) அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும், எந்த பிரிவை சேர்ந்தவர் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், படைத்துறையினர், பொதுப்பிரிவினர்) என்பதையும் குறிப்பிட வேண்டும். 6ஆம் வகுப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மொழியையும் (ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் இதர மாநில மொழிகள்) குறிப்பிட்டு, முதல்வர், சைனிக் பள்ளி, உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர விரும்புவோர் நுழைவுத்தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத இயலும்.
  விண்ணப்பப் படிவங்களை www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து பதிவு கட்டணத்துடன் சேர்த்து செலுத்த இயலும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சைனிக் பள்ளிக்கு வருகிற டிசம்பர் 5ஆம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும் விவரங்களுக்கு 04252 - 256246, 256296, 7840014449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai