சுடச்சுட

    

    பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8 மாதங்கள் சம்பள நிலுவையை வழங்க வலியுறுத்தி, ஏஐடியுசி பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள பாண்டெக்ஸ் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     பாண்டெக்ஸ் சாயப்பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு அரசு அறிவித்த போனஸ் தொகையும் தரப்படவில்லை.
     இதுகுறித்து கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நியாயமான கோரிக்கையை ஏற்று பாண்டெக்ஸ் மேலாண் இயக்குநரை அழைத்து சம்பளம், போனஸ் வழங்க உத்தரவிட்டார்.
     ஆனால், மேலாண் இயக்குநர் இதனை ஏற்காமல் தொழிலாளர்களை அலட்சியப்படுத்தி வருகிறார்.
     இதைக் கண்டித்தும், மேலாண் இயக்குநரை பாண்டெக்ஸ்சில் இருந்து மாற்ற வேண்டும். உடனே சம்பளம், போனûஸ வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     சிறப்புத் தலைவர் கே.சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முருகன், நெடுஞ்செழியன், குட்டன் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai