சுடச்சுட

  

  புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

  By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   சங்கத் தலைவர் டாக்டர் அமுதன், செயலாளர் இளஞ்செழியன், துணைத் தலைவர் டாக்டர் பூபாலன், துணைச் செயலர் டாக்டர் தினகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   நிலுவையில் உள்ள 14 சதவீத அகவிலைப்படி உயர்வை இம்மாத ஊதியத்துடன் இணைத்து தர வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்த வேண்டும். 1.7.16-இல் இருந்து மத்திய அரசு 14 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியும், புதுவை அரசு இன்று வரை உயர்த்தவில்லை.
   அதனை உயர்த்தித் தர வேண்டும். 1.1.206-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 6-ஆவது ஊதியக்குழு நிலுவை, பல ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்பட்ட பதவி உயர்வு ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும், 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய பதவி உயர்வு நேர்காணல் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு நடத்தப்படவில்லை. அதனை உடனே நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai