சுடச்சுட

    

    புதுவை வானொலியில் நாளை பிரதமரின் மனதின் குரல் ஒலிபரப்பு

    By  புதுச்சேரி  |   Published on : 28th October 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pm-modi

    பிரதமர் நரேந்திர மோடியின் "மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சி புதுவை வானொலி மூலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.29) ஒலிபரப்பாகிறது.

    மாதந்தோறும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றுகிறார். இதன் 37-வது நிகழ்ச்சி ஒலிபரப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும். தமிழ் மொழி பெயர்ப்பு இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும்.

    இரு நிகழ்ச்சிகளும், புதுவை அகில இந்திய வானொலியின் மத்திய அலை வரிசை 246.9 மீ மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும்.

    இத்தகவலை புதுவை வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai