சுடச்சுட

    

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியில் அமைந்துள்ள பிடாரி மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர் அங்கு வந்த போலீஸார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதே கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருடு போனது. கடந்த 6 மாதத்துக்கு முன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai