சுடச்சுட

  

  டெரகோட்டா பயிற்சி மையத்தில் மத்திய கைவினை மேம்பாட்டு ஆணையர் ஆய்வு

  By DIN  |   Published on : 29th October 2017 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வில்லியனூரில் உள்ள டெரகோட்டா பயிற்சி மையத்தில் மத்திய கைவினை மேம்பாட்டு ஆணையர் ஸ்ரீசாந்த்மனு சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
  இந்திய கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் சார்பில், புதுச்சேரிக்கு இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக ஆணையர் ஸ்ரீ சாந்த்மனு வந்தார். இந்த நிலையில், வில்லியனூரில் புவிசார் குறியீடு பெற்ற வில்லியனூர் டெரகோட்டா பயிற்சி மையத்துக்கு வந்த அவர், பயிற்சி மாணவர்கள் செய்த கைவினைப் பொருள்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு அடையாள அட்டை,  உபகரணங்களை வழங்கினார்.  அவருடன் மண்டலக் கைவினை துறை இயக்குநர் மல்லிகார்ஜுனா, மண்டல ஜவுளித் துறை இயக்குநர் விசேஷ்நாட்டிகல்,  உதவி இயக்குநர் ராமமூர்த்தி, கைவினை அபிவிருத்தி அதிகாரிகள் சத்திய மூர்த்தி, தர்ஷ்ணா ஆகியோரும் வந்திருந்தனர்.
  இவர்களை தேசிய விருது பெற்ற கைவினைக் கலைஞர்
  வி.கே.முனுசாமி வரவேற்றார். உடன் பயிற்சி ஆசிரியர் எ.குமரேசன், விருதாளர் சேகர், ஸ்தபதி அழகுமுத்து ஆகியோர் இருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai