Enable Javscript for better performance
தீபாவளி இலவசப் பொருள்களை வழங்கத் தடை விதித்தது ஏன்? ஆளுநர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி இலவசப் பொருள்களை வழங்கத் தடை விதித்தது ஏன்? ஆளுநர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி

    By DIN  |   Published on : 29th October 2017 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளிக்கு வழங்கப்படும் இலவசப் பொருள்களை வழங்கத் தடை விதித்தது ஏன் என, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். இருப்பினும், கேள்விகளுக்குப் பதில் கூறாமல் அவர் திரும்பிச் சென்றார்.
    வார இறுதி நாள்களில் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆய்வு செய்து வருகிறார்.
    அதன்படி, சனிக்கிழமை அவர் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் கிராமத்துக்கு ஆய்வு செய்ய சென்றார்.
    அங்கு, கிராமப் பகுதிகள் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்த பின்னர், உலக ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று பெண்களுடன் கயிறு இழுத்தல், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்றார்.
    இதைத் தொடர்ந்து, அப்பகுதி பெண்களிடம் அவர் பேசியதாவது:  பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காகத் தேவைப்படும் பணத்தை கந்து வட்டிக்காரர்களிடம் பெற்று அவதிப்படக் கூடாது. அருகே உள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்று கடனுதவியைப் பெற வேண்டும். வங்கிகள் கடன் தராவிட்டால், அரசிடம் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது.
    பெண்கள், குழந்தைகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
    அவை முறையாக அவர்களைச் சென்றடைய வேண்டும். கிராமப்புறங்களில் மதுப் பழக்கம் அதிகமாக உள்ளதால், குடும்பங்களைக் காக்கும் பொறுப்பு பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
    ஆரோக்கியமான, திறமையான பெண்களால்தான் வளமான புதுச்சேரியை உருவாக்க
    முடியும்.
    அரசு தனது வருவாய்க்காக மதுவின் மூலம் கிடைக்கும் பாவப் பணத்தைச் சார்ந்துள்ளது.
    இதனால் குழந்தைகள், பெண்கள் அவதிப்படுகின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
    பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது பொதுமக்கள் அவரது காரை மறித்து, தீபாவளி பண்டிகைக்குத் தர வேண்டிய இலவச அரிசி, வேட்டி, சேலைகளை வழங்காமல் தடை விதித்தது ஏன் என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
    இதனால், அதிர்ச்சியடைந்த ஆளுநர் கிரண் பேடி பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். போலீஸார் அவர் செல்வதற்கு பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai