Enable Javscript for better performance
பதாகைகளை அகற்ற இரு நாள்கள் கெடு: அமைச்சர் நமச்சிவாயம்- Dinamani

சுடச்சுட

    

    பதாகைகளை அகற்ற இரு நாள்கள் கெடு: அமைச்சர் நமச்சிவாயம்

    By DIN  |   Published on : 29th October 2017 07:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரியில் வைக்கப்பட்ட பதாகைகளை 2 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
    புதுவை சட்டப்பேரவைக் குழு அறையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பதாகைகள் வைப்பது தொடர்பாக,  சென்னை உயர் நீதிமன்றம் புதிதாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை புதுவை மாநில அரசு முழுமையாகச் செயல்படுத்தும்.
    அதன்படி உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பதாகைகளை வைக்க வேண்டும். மேலும், உயிரோடு இருப்பவர்களுக்கு பதாகைகள் வைக்கக் கூடாது. புதுச்சேரி,  உழவர்கரை நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் 2 லட்சம் சதுர மீட்டர் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், சிக்னல் பகுதி, சாலைத் தடுப்புச் சுவர் உள்ளிட்ட இடங்களில் அனுமதி பெற்று பதாகைகள் வைக்கலாம்.
    உயர் நீதிமன்ற உத்தரவு சனிக்கிழமை (அக். 28)முதலே நடைமுறைக்கு வந்துள்ளது.
    ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் பதாகைகள் வைத்தவர்கள் அவற்றை இரு நாள்களுக்குள் அகற்ற வேண்டும். மீறினால், உள்ளாட்சி நிர்வாகமே அவற்றை அகற்றி, அதற்கான கட்டணத்தை உரியவர்களிடம் வசூலிக்கும்.
    மேலும், காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய போலீஸ் பாதுகாப்புடன் பதாகைகள் அகற்றப்படும். மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்மன்றத்தினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பதாகைகள் வைக்க அனுமதி தந்ததன் மூலம், நகராட்சிகளுக்கு ரூ. 3.2 லட்சம் வருவாய்க் கிடைத்துள்ளது.
    டெங்கு தடுப்பு நடவடிக்கை: டெங்கு பாதிப்பைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லாஸ்பேட்டை, காலாப்பட்டு பகுதிகளில்தான் அதிக அளவில் பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. டெங்குவால் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றவும், டெங்கு பரவாமல் தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    கேபிள் டிவி கட்டண நிலுவையை வசூலிக்க உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நகராட்சி ஊழியர்களே சொத்து வரி வசூலிக்கும்போது கேபிள் டிவி கட்டணத்தையும் வசூலிக்கலாமா என அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
    நவம்பர் 8-இல் கருப்பு தினம்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க தேசிய அளவில் 27 கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக புதுவையில் 31-ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை செய்ய உளளோம். அப்போது கருப்பு தினம் கடைப்பிடிப்பது குறித்து அறிவிக்கப்படும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது.
    இதற்காக வரும் திங்கள்கிழமை (அக். 30) பொதுப்பணி, உள்ளாட்சித் துறைகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
    சொத்து வரியை நிர்ணயிப்பதற்காக டிரோன் மூலம் வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று  வருகிறது என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai