சுடச்சுட

  

  ரெளடிகள் கொலை வழக்கு: சரணடைந்தவர்களுக்கு 3 நாள்கள் காவல்

  By DIN  |   Published on : 29th October 2017 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மூன்று ரெளடிகள் கொலை வழக்குத் தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த எதிரிகளை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
  புதுச்சேரி, மேட்டுபாளையம் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி ரெளடிகள் நாய் சேகர், ஜெரால்டு, சதீஷ் ஆகியோர் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரசன் தலைமையிலான கும்பல் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கொலையாளிகளை போலீஸார் தேடி வந்த நிலையில், தமிழரசன், வேலுமணி, அந்தோணி ஆகியோர்  சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
  புதுச்சேரி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சரணடைந்தவர்களை மேட்டுபாளையம் போலீஸார் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
  தொழில் போட்டியில் தனது தம்பியை போலீஸாரிடம் நாய்சேகர் காட்டிக் கொடுத்ததால், கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் கொடுத்தார். பின்னர், அவர் தந்த தகவலின்படி வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai