சுடச்சுட

    

    புதுச்சேரியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
    புதுச்சேரி கென்னடி நகர் பூங்குளம் கிணறு பகுதியில் சனிக்கிழமை இரவு உருளையன்பேட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, கையில் கத்தியுடன் இருட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரைப் பார்த்தனர்.  
    போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
    அவர்கள், உடையார்தோப்பைச் சேர்ந்த வீரப்பன் மகன் ஆனந்த் (எ) அசால்ட் ஆனந்த் (22), பெரியார் நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் ஜோசப் (எ) நித்தியானந்தம் (33) என்பது விசாரணையில் தெரிய வந்தது.
    இருவரிடமிருந்தும் வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அசால்ட் ஆனந்த் மீது 2 கொலை வழக்குகளும், நித்தியானந்தம் மீது ஒரு கொலை வழக்கும், பல்வேறு அடி தடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai