Enable Javscript for better performance
ஆளுநர் இருக்கையில் சிறுவனை அமரவைத்து ஊக்கப்படுத்திய கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் இருக்கையில் சிறுவனை அமரவைத்து ஊக்கப்படுத்திய கிரண் பேடி

    By DIN  |   Published on : 30th October 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவைஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்க்க வந்த சிறுவனை தனது அதிகாரப்பூர்வ இருக்கையில் அமரவைத்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஊக்கப்படுத்தினார்.
    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சனிக்கிழமைகளில் ஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது ஆளுநர் கிரண் பேடி இருந்தால் சிறுவர்களை அழைத்துப் பேசி உற்சாகமூட்டி வருகிறார். இந்த நிலையில், சனிக்கிழமை ஆளுநர் மாளிகையை பார்க்க வந்த சிறுவனை தனது அதிகாரப்பூர்வ இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்தினார்.  
    அந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இச்சிறுவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் ஆளுநராக வந்தாலும் வரலாம், அதனை யார் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai