சுடச்சுட

  

  புதுவை அறிவியல் இயக்கம், புதுவை பள்ளி கல்வித் துறையின் மாநில பயிற்சி மையம் சார்பில் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு திங்கள்கிழமை (அக்.30)நடைபெறுகிறது.
  நிகழாண்டு 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாட்டு ஆய்வு தலைப்பாக "நிலையான வளர்ச்சிக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதுமை கண்டுபிடிப்புகள்'என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  இதன் ஒரு பகுதியாக மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு, பள்ளிக் கல்வித்துறை வளாக கருத்தரங்க கூடத்தில் திங்கள்கிழமை காலை 10.00 மணி தொடங்கி  மாலை 4.30 வரை நடைபெற உள்ளது. புதுச்சேரியில் உள்ள  நடுநிலைப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பிக்க உள்ளனர்.  மாநாட்டை மாநில பயிற்சி மைய சிறப்புப் பணி அலுவலர் வே. வெற்றிவேல் தொடக்கி வைக்கிறார்.
  பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்,  அறிவியல் இயக்கத் தலைவர் வி.அமுதா, அறிவியல் இயக்க பொதுச் செயலர்
  அ.ஹேமாவதி, அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஆர். தட்சிணாமூர்த்தி,  மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் என்.அருண், மாநில ஒருங்கிணைப்பாளர் சு.சேகர்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  நா. சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
  மாணவர்களின் ஆய்வறிக்கைகளை முனைவர் சங்கரய்யா, ரவிச்சந்திரன், நாராயணசாமி,  ஷோபனா,  மாதவன், இலக்கியா, கிறிஸ்டியன் பாரதி ஆகியோர் மதிப்பீடு செய்ய உள்ளனர். இதன் ஏற்பாடுகளை பொருளாளர் ரமேஷ், விஜயமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai