Enable Javscript for better performance
எஸ்.பி. மற்றும் போலீஸார் மீது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் புகார்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.பி. மற்றும் போலீஸார் மீது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் புகார்

    By DIN  |   Published on : 30th October 2017 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி, மரியாதைக் குறைவாக நடத்தியதாக எஸ்.பி மற்றும் போலீஸார் மீது சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் புகார் அளித்தனர்.
    முத்தியால்பேட்டை மார்க்கெட்டை ஆய்வு செய்யச் சென்ற ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக அதிமுகவினர், பொதுமக்கள் கருப்புக் கொடி காட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல் கண்காணிப்பாளர் வேங்கடசாமி மற்றும் போலீஸார் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அப்போது எஸ்.பி. வேங்கடசாமி, எம்.எல்.ஏ.வை தகாத வார்த்தைகள் கூறி, மரியாதைக் குறைவாக நடத்தினார் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் மற்றும் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வைத்திலிங்கத்தை சந்தித்து உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக புகார் மனு அளித்தனர்.
    ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மக்கள் பிரதிநிதியை அவரது பணியை செய்யவிடாமல் எஸ்.பி. மற்றும் போலீஸார் மரியாதைக் குறைவாக நடத்தி உள்ளனர். இது உரிமையை மீறுவதாகும் என புகார் மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட வைத்திலிங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
    பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது:
    புகார் மனுவை, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து தலைமையிலான உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பேன். அக்குழு அதை பரிசீலித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
    எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியதாவது:
    புதுச்சேரியில் ஆய்வு என்ற பேரில் செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம் துணைநிலை ஆளுநர் தான். புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai