சுடச்சுட

  

  அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனிடம் தரக்குறைவாக நடந்ததாக காவல்துறையினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
  அதன் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கை:
  முத்தியால்பேட்டை தொகுதியின்  எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், அவரது தொகுதி மக்களைத் திரட்டி முத்தியால்பேட்டை பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை தீர்க்காத துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்புத்  தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொகுதியில் வரும் அசுத்தமான குடிநீரை ஆளுநரிடம் காண்பிக்க அனுமதி பெற்ற பின்னரும் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
  எஸ். பி. வேங்கடசாமி தலைமையில்  காவல்துறையினர், சட்டப்
  பேரவை உறுப்பினர் என்று பாராமல் அத்துமீறி நடந்து கொண்டனர். இதுபோன்று நடக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai