Enable Javscript for better performance
சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 30th October 2017 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறந்த கலைஞர்கள், இலக்கிய படைப்பாளர்கள், கலைக் குழுக்களுக்கான விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என குழந்தைகள் கலை, இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் அ.உசேன் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
    வரும் 17.12.17-இல் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.
    கலை, இலக்கிய துறையில் சாதனை படைக்கும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு சிறுவரை கலைச்சிகரம், கலைச்சுடர், இளைஞர் கலைச்சிகரம், கலைச்சுடர் விருதுகள் அவர்கள் செய்துள்ள சாதனைகளுக்கு ஆதாரமாக அனுப்பப்படும் சான்றுகள் அடிப்படையில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
    சிறுவர்களுக்கு 18 வயது வரையும், இளைஞர்களுக்கு 30 வயது வரையும் விருதுகள் தரப்படும்.
    இயல், (பேச்சு, தனி நடிப்பு, கட்டுரை, கதை, கவிதை தீட்டுதல், பலகுரல் திறமை), இசை (மெல்லிசை, வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் இசைத்தல்), நாடகம் (மேடை நாடகம் அமைத்தல், நடித்தல், தெருக்கூத்து), ஓவியம், நாட்டியம் (பரதநாட்டியம், குழு நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம்) ஆகிய 5 துறைகளில் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தனித் தனியாக விருதுகள் வழங்கப்படும்.
    ஒருவர் ஒரு துறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
    விண்ணப்பிக்கும் துறையில் அவர்கள் பெற்றுள்ள சான்றுகள், செய்தித்தாள்களில் வந்துள்ள குறிப்புகள், பிறந்த தேதிக்கான சான்று இணைத்து அனுப்ப வேண்டும்.
    மேலும் வெள்ளைத்தாளில் சிறிய பாஸ்போர்ட் புகைப்படத்தோடு பெயர், பெற்றோர் பெயர், வயது, படிக்கும் பள்ளி, கல்லூரி, தொடர்பு முகவரி, தொலைபேசி, செல்லிடப்பேசி போன்றவற்றை எழுதி, எந்த துறைக்கு விண்ணப்பிக்கிறாரோ அதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பங்களை அ.உசேன், தலைவர், குழந்தைகள் கலை, இலக்கிய வளர்ச்சிக் கழகம், 309, பாரதியார் சாலை, அசோக் நகர், புதுச்சேரி-8. என்ற முகவரிக்கு வரும் 11.11.17-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0413-2255241, 9442582281-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai