சுடச்சுட

  

  ஜிப்மர் ஆராய்ச்சித் தொகுப்பு நூலை பிரான்ஸ் நாட்டு துணை தூதர் கேத்ரீன் ஸ்வார்ட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
  ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுவது மற்றும் வெளியிடுவது என்பது தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் சுபாஷ் சந்திரபரிஜா,  அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் விக்ரம் காடே ஆகியோர் புத்தகத்தை தொகுத்துள்ளனர்.
  புதுச்சேரியில் உள்ள பிரான்சு நாட்டு துணை தூதர் கேத்ரின் ஸ்வார்டு இந்த நூலை வெளியிட்டுப் பேசியதாவது:
  மனித இன வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம். கற்காலம் முதல் இன்றைய நவீன தொழில்நுட்ப காலம் வரையிலான இந்தப் பயணம் ஒரு நெடிய பயணமாகும்.
  கடந்த காலங்களில் பல்வேறு கால கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய முறையில் வரலாற்றையும் கண்டுபிடிப்புகளையும் பதிவு செய்து வருகிறான்.
  அதனடிப்படையில் நமக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் "உரிய பதிவு' என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்புத்தகம் அதேபோன்ற தனித்துவத்தை பெற்றது.
  இயக்குநர் பரிஜா தனது ஆராய்ச்சி அனுபவங்களை புத்தகங்களாக எழுதியுள்ளார். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் பயனுள்ள புத்தகம் இதுவாகும் என்றார்.
  இயக்குநர் பரிஜா பேசுகையில், ஜிப்மர் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கும் உள்ள வரலாற்று சிறப்பம்சங்களையும், தொடரும் பல்வேறு கூட்டு ஆராய்ச்சி செயல்பாடுகளையும் விவரித்தார்.
  அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் விக்ரம் காடே, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே, ஜிப்மர் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், ஜிப்மர் ஆராய்ச்சி முதல்வர் விஷ்ணுபட், மூத்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai