சுடச்சுட

  

  புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
  புதுச்சேரியை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி (55) . டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
  டெங்குவால் உயிரிழந்த சுப்பிரமணி அடுத்த வாரம் பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  புதுச்சேரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில், சுப்பிரமணியத்தையும் சேர்த்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai